Skip to main content

காப்பாற்ற யாரும் வரவில்லை என்றால் குகையை உடைக்கலாம் என்றிருந்தோம்!! -குகையில் சிக்கிய 13 பேரின் அனுபவம்!!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

தாய்லாந்தில் குகையில் சிக்கி மீட்கப்பட்ட 13 பேருடனான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.  அந்த சந்திப்பில் பல சுவாரசிய கேள்விகளுக்கு சிறுவர்கள் பதிலளித்தனர்.

 

தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல் போயினர். 

 

CAVE

 

 

 

இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் அதுவரை குகையில் மயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருந்த இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.

 

CAVE


தொடர் மீட்பு நடவடிக்கையின் பொழுது அவர்களுக்கான அடிப்படை பொருட்களை கொண்டு சென்ற 38 வயதான சமன் குணன் என்ற மீட்பு வீரர் உள்ளே சிக்கி தவிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று திரும்பும் வழியில் மூச்சுத்திணறி இறந்தார். இப்படி பல சிரமங்களுக்கு இறுதியில் 13 பேரும் பத்திரமாக ஒவ்வொரு கட்டமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பட்டனர். அதன் பின்னே தாய்லாந்தில் மகிழ்ச்சி திரும்பியது.

 

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை முடிந்து டிஸ்சார்ச் ஆன 13 பேரும் நேற்று செய்தியாளகர்ளை சந்தித்து தங்களது அனுபவம், தங்களின் எதிர்கால ஆசைகள் பற்றி உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

CAVE

 

 

 

நீங்கள் வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் தாங்கள் கால்பந்தாட்ட வீரர்களாக ஆகப்போகிறோம் எனவும் ஒருவர் மட்டும் நீர்முழ்கி நீச்சல் வீராக போகிறேன் எனவும் தெரிவித்தார், அந்த உரையாடலில் மீட்பு பணியில் இறந்த சமன் குணன் பற்றி பேசிய ஒரு சிறுவன் அவர் என் தந்தை மாதிரி அவரை மறக்கமாட்டோம் நினைவிருக்குவரை என உருக்கமாக பேசினான்.

 

உங்களை காப்பாற்ற யாரும் வரவில்லை எனறால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் நீர் வற்றியவுடன் வெளியே வந்துவிடலாம் இல்லையெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து குகையை உடைத்து வெளியே வந்துவிடலாம் என யோசித்து வைத்திருந்தோம் என கூறினர்.

 

நீங்கள் குகைக்கு போகிறீகள் என்பது உங்கள் பெற்றோருக்கு முன்னரே தெரியுமா என்ற கேள்விக்கு, பலர் தெரியாது நாங்கள் கால்பந்தாட்ட பயிற்சிக்கு செல்கிறோம் என்றே சொல்லிவிட்டு சென்றோம் என்றும், சிலர் சொல்லிவிட்டுத்தான் சென்றோம்.  அது ஆபத்தான இடம் என்று வீட்டில் அறிவுறுத்தினார்கள் எனவும் கூறினர்.

 

 

இனி குகைக்கு செல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, பலர் ஆம் பாதுகாப்புடன் செல்ல விருப்பம் இருக்கிறது என்றும், சிலர் இனி குகை பக்கமே செல்லமாட்டோம் எனவும் கூறினர்.  

சார்ந்த செய்திகள்