Skip to main content

ஐ-ஃபோன் யூசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

i

 

புதிதாக ஆப்பிள் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ். 12, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளிவந்தது. இதற்கு முன்பாக ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் சீரியஸில் பல ஃபோன்கள் வெளிவந்து இருக்கிறது. அதை எல்லாம் ஐ-ஃபோன் ஐ.ஓ.எஸ் 12-க்கு அப்டேட் செய்துகொள்ளலாம், அந்த அப்டேட்க்கான வழிமுறைகளும் அப்படி அப்டேட் செய்யும்முன் ஐ-ஃபோனில் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம் அப்டேட் செய்யலாம் என்றால், இதுவரை வந்த அனைத்து சீரியஸ்களையும் அப்டேட் செய்துகொள்ளலாம். சரி இதை எப்படி அப்டேட் செய்வது. மிக எளிமையான சில வழிமுறைகளில் இதை செய்து முடித்துவிடலாம். முதலில் அப்டேட் செய்யும்முன் உங்கள் ஐ-ஃபோனை பி.சி.இல், யு.எஸ்.பி. கேபிள் மூலம் கனேக்ட் செய்ய வேண்டும். பிறகு உங்கள் பழைய ஐ-ஃபோனில்  இருக்கும் தரவுகளை எல்லாம் பேக்அப் எடுத்துக்கொள்ள வேண்டும், இதற்கு போதுமான ஸ்டோரேஜ் அளவை வைத்திருக்க வேண்டும். அப்டேட் செய்வதற்கு ஐ-க்ளோவ்வுட் (iCloud) அல்லது ஐ-டியுன்ஸ் (iTunes) ஆகியவைகளை பயன்படுத்தி வைஃபை முலம் அப்டேட் செய்துகொள்ளலாம். முதலில் செட்டிங்ஸ்->ஜெனரல்->சாஃப்ட்வேர் அப்டேட் அதன் பிறகு ஓகே செய்து அப்டேட் செய்துகொள்ளலாம். அதிகமானோர் அப்டேட் செய்வதால், சாஃப்ட்வேர் டவுன்லோட் ஆவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக உங்கள் பாஸ்வர்ட் மற்றும் யூசர் ஐ.டி இரண்டையும் நினைவில்கொள்ள வேண்டும்.  

சார்ந்த செய்திகள்