Skip to main content

கிம் ஜாங் உன்-இன் மகளா இது?- வெளியான புகைப்படம்

 

Is this Kim Jong Un-in's daughter?- Photo released

 

ஒற்றை பட்டனை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கே சவால்விட்டு உலக நாடுகளை மிரட்டியவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவரும், ட்ரம்ப்பும் மாற்றி மாற்றி அணு ஆயுத பட்டனை அழுத்திவிடுவேன் என பூச்சாண்டிகாட்டியதை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. இடையிடையே கிம்மிற்கு உடல்நல கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும், அவர் செயல்படாத நிலையில் கோமாவில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். பின்னர் அந்த பரபரப்பை உடைக்கும் வகையில் மீண்டும் பொது நிகழ்வில் தோன்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் கிம் ஜாங் உன்.

 

கிம் ஜாங் உன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தற்பொழுது சர்வ சாதாரணமாக பொதுவெளியில் தோன்றி வரும் நிலையில் கிம்மின் மனைவி, அவரது குழந்தைகள் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் பெரிதாக வெளியானதில்லை. ஆனால் தற்பொழுது கிம் ஜாங் உன்-இன் மகள் குறித்த தகவல் வெளியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் பொழுது மேடையேற்றப்பட்ட கிம் ஜூ பே என்ற சிறுமி அங்கிருந்த சிறுமிகளுடன் நடனமாடினார். இவர் கிம் ஜாங் உன்-இன் மகள் என்று செய்திகள் வெளியாகின. காரணம் அந்த நிகழ்வில் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்ட நிலையில் கிம் ஜாங் உன்-இன் மனைவி ரி சோல் ஜூ மேடையிலிருந்த பல சிறுமிகளில் அந்த  சிறுமியை அரவணைத்ததால் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !