Skip to main content

3 இடங்களில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

 Earthquake in 3 places ... Tsunami warning!

 

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்திருந்த நிலையில், சுனாமிக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ள இந்தத் திடீர் நிலநடுக்கத்தால் 90 பேர் இதுவரை காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக பொன்சோ தீவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 20 லட்சம் வீடுகள் மின்சார சேவை இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக பல நகரங்களில் ரயில் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவரை பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது ஜப்பான் அரசு. ஜப்பான் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஸ்காட் மற்றும் இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சிறிது நேரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இப்படி ஒரே நாளில் மூன்று இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The famous director ss rajamouli caught in the earthquake in Japan

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.

அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

The famous director ss rajamouli caught in the earthquake in Japan

இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். 

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.