Skip to main content

10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்காத அதிசய கிராமம்... குவியும் ஆராய்ச்சியாளர்கள்..

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்காத அதிசய கிராமம் ஒன்று போலந்து நாட்டில் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

 

The Polish village where no boys have been born for almost a decade

 

 

போலந்து நாட்டில் உள்ள மீஜிஸ் ஓட்ரன்ஸ்கி என்ற கிராமத்தில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. சமீபத்தில் இளம் தீயணைப்பு வீரர்கள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சாகச நிகழ்ச்சி ஒன்று அந்நாட்டில் நடந்துள்ளது. அதில் பல ஊர்களை சேர்ந்த சிறுவர்கள், சிறுமியர்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இந்த ஒரு கிராமத்திலிருந்து சிறுமிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனையடுத்து அங்கிருந்த அரசாங்க அதிகாரிகள் அந்த சிறுமிகளின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆராய்ந்து பார்த்தும் இன்று வரை அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்கின்றனர் அக்கிராம மக்கள். ஆண் குழந்தை பெரும் தம்பதிகளுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அப்பகுதி மேயர் கடந்த சில ஆண்டுகளாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் அறிவிப்புகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளனவே தவிர அந்த கிராமத்தில் ஆண் குழந்தைகள் மட்டும் பிறக்கவே இல்லை. தற்போது இந்த செய்தி உலகம் முழுவதும் பிரபலமான நிலையில் இது குறித்து ஆராய்ச்சி செய்ய பலர் ஆர்வமாக அக்கிராமத்தை நோக்கி சென்று வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி; போலீசார் தீவிர விசாரணை

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

trichy srirangam issue for poland country foreign job agency related incident

 

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக மீனாட்சி என்பவர் உள்ளார். மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி பெரிய கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 39) மற்றும் அவரது உறவினர்கள் ஆதித்யன், அகஸ்டின், ஜெயக்குமார், முத்துராமலிங்கம் ஆகிய நான்கு பேரிடம் போலந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று உறுதி அளித்தபடி வேலை பெற்றுத் தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் உரிமையாளர் மீனாட்சி மற்றும் மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகத்தை போலந்துக்கு மாற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Indian Ministry of External Affairs decides to shift Indian Embassy in Ukraine to Poland!

 

உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்ரனைத் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்த இந்திய தூதரகத்தை போலந்து நாட்டிற்குத் தற்காலிகமாக மாற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

 

உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கீவ், லிவிவ் நகரங்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து, வெடிகுண்டு வீசப்படுவதால், பாதுகாப்புக்காக பலர் நிலவறைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தச் சூழலில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும், இந்திய தூதரகத்தை பாதுகாப்பு கருதி போலந்து நாட்டிற்குத் தற்காலிகமாக மாற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

 

உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களும், இந்திய மாணவர்களும் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து, தற்போது தூதரக அலுவலகத்தில் இருக்கும் இந்தியர்களையும் பாதுகாக்க, இந்திய வெளியுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி உட்பட 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

 

மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும், அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தூதரகத்தில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைனில் அடுத்து நிகழ உள்ள சூழலைப் பொறுத்து, இந்த முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.