Skip to main content

காவிரிக்காக எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை: மு.க.ஸ்டாலின்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018


காவிரிக்காக எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கப்பட உள்ளது. இந்த பயணத்திற்காக திருச்சிக்கு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். இன்று திருச்சியில் துவங்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 13 கடலூரில் முடிவடையும். அங்கு பொதுகூட்டம் நடத்தப்படும். பிறகு அங்கிருந்து சென்னை வந்து, பேரணியாக சென்று ஆளுநரை சந்திப்போம்.

நடைபயணம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் மீண்டும் கூடி ஆலோசிப்போம். காவிரிக்காக நடைபெறும் மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்; இரு குழுக்களாக பயணத்தை தொடர்கிறோம். பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. அதனால் அவர் தமிழகம் வரும் போது கறுப்புக் கொடியுடன் சென்று அவரை சந்திக்க உள்ளோம். காவிரிக்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார். காவிரி பிரச்னையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்