Skip to main content

மீண்டும் உள்வாங்கிய பாதாளசாக்கடை குழாய்; பீதியில் வாகன ஓட்டிகள்!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலையில் திடீர் பள்ளம். 5 அடி அகலத்தில் 20 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

 NAGAI

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பராமரிப்பு பணிகள் ஒப்பந்தகாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகரத்தில் 15 ஆயிரத்துக்கு அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் செம்பனார்கோயில் அருகில் உள்ள ஆறுபாதியில் பாதாள சாக்கடை நீர் தேக்க நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

 

பாதாள சாக்கடை குழாய் மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்படுத்தி பீதியை கிளப்பிவருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டும் மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுவதாலும் வாகனங்கள் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

பாதாள சாக்கடையினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருப்பது நான்காவது முறையாகும். " பத்தாயிரம் இணைப்புகள் வரை தரக்கூடிய இத்திட்டத்தில் நகராட்சியின் அனுமதியின்றி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பொதுமக்கள். இந்த பள்ளத்தை சரி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்றும், ஆமை வேகத்தில் பணிநடைபெறும் என்றும் மக்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்