
கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராமன்(28). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை பரிசாக ஆசிரியர் ராமன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்மூலம் மாணவியிடம் ராமன் அத்துமீறி நடந்துள்ளார்.
இந்த சூழலில் மாணவியை ஆசிரியர் ராமன் தனியாக அழைத்துள்ளார். ஆசிரியர் என்று நம்பிச் சென்ற மாணவியிடம் ராமன் அத்துமீறி நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு சென்ற மாணவி மன வேதனையில் வீட்டில் இருந்த டீசலை எடுத்துக் குடித்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்துமாணவையிடம் பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் ராமன் குறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியர் ராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.