Skip to main content

டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

tamilnadu tasmac shops near bar chennai high court order

 

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட  வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சிலம்பரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானக் கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவற்றின் அருகில் விபத்துகளும் நடைபெறுவதாகவும்,  மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாக கோர முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக்கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
High Court questions to vengaivayal case

கடந்த 2022ஆம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிறது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இதற்கிடையில், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு முன் வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறியது. இதனையடுத்து, அரசு தரப்பில், ‘புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியது. 

அதனைத் தொடர்ந்து சென்னை நீதிமன்றம் கூறியதாவது, ‘வேங்கைவயல் வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஒருவரைக் கூட கைது செய்ய முடியாதது ஏன்? 2 வாரங்களில் தீர்க்கமான முடிவை அரசு எட்ட வேண்டும்’ எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்; “எப்படி அனுமதி வழங்க முடியும்?” - நீதிபதி கருத்து

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Judge opinion Armstrong was buried

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தப் பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது, “பெரம்பூரில் சுமார் 7.500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது. விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது போல் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறினார். 

இதையடுத்து அரசு தரப்பில் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே சமயம் விதிகளை மீற முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். அந்த இடத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம்” என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?. முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அரசுதான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதுவர் உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும். 

நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையைத் தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார்.