Skip to main content

தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்!

Published on 01/12/2019 | Edited on 01/12/2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "தமிழகத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடியில் தலா 17 செ.மீ, மணிமுத்தாறு 15 செ.மீ, வேதாரண்யத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார். 
 

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

tamilnadu and puducherry heavy rains possible chennai meteorological director


லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இயல்பு அளவான 39 செ.மீ  பதிலாக 42 செ.மீ வரை மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை.  தமிழகத்தில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. 
 

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் குறிப்பிட்டார்.



 

சார்ந்த செய்திகள்