Skip to main content

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரி வருகை

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
Mohan Bhagwat


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் 2 நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை காலை கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை மாறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மோகன் பகவத் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குமரி மாவட்டத்தில் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா சுயநலம் கொண்ட நாடு அல்ல” - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rss leader mohan bhagwat said India is not a selfish country

 

“உலகத்திற்கு ஒரு புதிய பாதையை இந்தியாதான் காண்பிக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  

 

பஞ்சாப் மாநிலத்தில், நாம்தாரி சர்வதேச தலைமையகம் பைனி சாஹிப்பில், சத்குரு பர்தாப் சிங் மற்றும் மாதா பூபிந்தர் கவுர் ஆகியோரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய அவர், “உலகில் சமநிலையை உருவாக்குவதே இந்தியாவின் வேலை.  இந்தியா அதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு அல்ல; அது அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறது” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சக்திகள் நாட்டை மட்டுமல்லாமல், உலகத்தையும் சேர்த்துச் சேதப்படுத்துகின்றன. மேலும், உலகத்திற்கே ஒரு புதிய பாதையை இந்தியா தான் காண்பிக்க வேண்டும். அதேசமயம் அதன் பாரம்பரியங்கள், கலாச்சாரம், பாரம்பரியத்தை விடாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே, மதத்தின் பொருள் என்பது ஒன்றுபடுவதே தவிர, அது சிதைவதைப் பற்றிப் பேசவில்லை" எனப் பேசினார். 

 

 

Next Story

“பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடரவேண்டும்” -  ஆர்.எஸ்.எஸ் தலைவர் 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Reservation should continue as long as there is discrimination says mohan bhagwat

 

“பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

 

நாக்பூரில் நேற்று(6.9.2023) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “உலக அளவில் குடும்ப அமைப்பு வீழ்ச்சி அடைந்து வந்தாலும், நாம் மட்டும் அந்த வீழ்ச்சியில் இருந்து தப்பித்து இருக்கிறோம். நமது பாரதத்தின் அடித்தளம் உண்மை என்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. நமது கலாச்சார வேர்களைப் பிடுங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கலாச்சாரத்தின் வேர்கள் உண்மை என்பதால் பாரதம் பாதுகாக்கப்படுகிறது.

 

சமூக அமைப்பில் சக மனிதர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சம உரிமையை வழங்கும் வரை இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் கொடுக்க வேண்டும். பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு தொடரவேண்டும். இதற்கு ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவளிக்கும்.” என்றார்.