Published on 21/11/2018 | Edited on 21/11/2018

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில்,
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் காசிமேடு, திருவெற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.