Skip to main content

விவசாயிகளை பங்குதாரர்களாக்கி சுங்க வருவாயில் பங்களிக்க மறுப்பதேன்? பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
P.R.Pandian


சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தியாகிகள் தினம் சிறப்புக் கூட்டம் இன்று (05.07.2018) நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.
 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
 

தமிழ்நாட்டில் சாலை, உயர் மின் கோபுரம், எரிவாயு கொண்டு செல்வதற்கு விளை நிலங்கள் விவசாயிகளின் அனுமதியில்லாமல் அபகரிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இதனால் கொங்கு மண்டல விவசாயம் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
 

 

 

விவசாயிகளின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் கூட்ட அரங்கிற்கு கூட மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
 

8 வழிசாலை குறித்து பேசக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர். மீறிப் பேசினால் கைது செய்வோம் என மிரட்டினர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். பன்னாட்டு பெரு முதலாளிகள் சுங்கம் வசூலித்து தொழில் செய்ய விவசாயிகளின் விளை நிலங்கள் அபகரிக்க நினைக்கும் அரசு நிலமளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க பங்குதாரர்களாக்கி சுங்க வரி வருவாயில் விவசாயிகளுக்கும் பங்களிக்க மறுப்பதேன்?
 

 

 

நெல் குவிண்டால் 1க்கு ரூபாய் 200 விலை உயர்வு ஏமாற்றமளிக்கிறது. உற்பத்தி சிலவோடு சிலவில் 50%த்தை லாபகரமான விலையாக உயர்த்தி வழங்க மறுக்கும் பிரதமர் மோடி 2022ல் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று பேசுவது விவசாயிகளை வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான சூழ்ச்சியாகும்.
 

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கினைப்பாளர் வசீகரன் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக படுகொலையாகும். உடன் நிபந்தனையின்றி விடுதலை செய்திட வலியுறுத்துகிறேன் என்றார்.
 


 

சார்ந்த செய்திகள்