திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 7ந்தேதி பெரியத்தேர் என்கிற மகாரதமும் டிசம்பர் 10ந்தேதி மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 7ந்தேதி முதல் 10ந்தேதி வரை 4 நாட்கள் திருவண்ணாமலை நகரத்தில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், மாமிசம் என்கிற அசைவ விற்பனை கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதான் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. பக்திமார்கத்தில் உள்ளவர்கள் யாரும் திருவிழா காலங்களில் அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் செய்யமாட்டார்கள். கோயிலுக்கு வந்து செல்பவர்கள் அசைவ உணவுகளை உண்ணமாட்டார்கள். தேவைப்படுபவர்கள் தான் சாப்பிடபோகிறார்கள், வீட்டிற்கு வாங்கி சென்று சமைத்து உண்ணப்போகிறார்கள். அப்படியிருக்க அசைவமே நகரத்தில் விற்பனை செய்யக்கூடாது என்பது எந்த விதத்தில் சரியானது என்று அந்த தொழில் செய்யும் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.