கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய ஆய்வு குழுவினர் இன்று பார்வையிடவுள்ளனர்.

 Central Inspection Board came to Chennai

Advertisment

டெல்லியில் கஜாபுயல்பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மோடியைசந்தித்து நிவாரண நிதி கோரியுள்ளார்,அதேநேரத்தில் மத்திய ஆய்வுக்குழுவினர் தமிழகம் வந்து சேதபாதிப்புகளை கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதமர் மோடியிடம் வைத்தார்.

Advertisment

இந்நிலையில் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். அந்த குழுவில் நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி கபில்,வேளாண்துறை இயக்குனர் ஸ்ரீவர்சவா,ஊரக வளர்ச்சிதுறை துணைச்செயலாளர் மாநிக்சந்த் பண்டிட், மின்துறைதலைமை பொறியாளர் வந்தனாசிங்கால்ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவுடன் சென்னை நீர்வளத்துறை அதிகாரிகள் ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பொறியியல் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சென்னையில் உள்ள தாஜ் ஹவுஸில் தங்கியுள்ள மத்திய குழுவினர் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர் முதற்கட்டமாக புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புதுக்கோட்டை தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.