Skip to main content

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள ஏழு பேரில் ஒருவரான நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

 

Nalini in court


அந்த ஆட்கொணர்வு மனுவில், அரசின் முடிவுக்கு பிறகும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள்  நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த ஆட்கொணர்வு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்