Published on 03/06/2022 | Edited on 03/06/2022

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் திறக்கப்பட்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார்.