Skip to main content

மாதவிடாய் தீண்டாமையா?-தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலால் அதிர்ச்சி

Published on 10/04/2025 | Edited on 10/04/2025
nn

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டுபாளையம் கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்தபடி தேர்வு எழுத வைக்கப்பட்டிருந்தார். திடீரென அங்கு வந்த சிறுமியின் தாய் ஏன் வெளியே அமர்ந்திருக்கிறாய் என கேட்டதற்கு 'தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் வெளியே அமர வைத்து தேர்வு எழுத பணிக்கப்பட்டதாக' மாணவி தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாத்தா சாராட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் பூப்பெய்திய காரணத்தால் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டது தீண்டாமை குற்றம் என புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் தற்போது சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொள்ளச் சென்றுள்ளார். பள்ளித் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் மாதவிடாய் காரணத்திற்காக மாணவிகளை தனியாக அமர்த்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கையாக விடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்