
தமிழக அரசு பணி நியமனங்களில் ஐடிஐ தேர்வர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தொழிற்பயிற்சி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சாலை ஆய்வாளர் பணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு தடையாணை இல்லாத உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி மூலச்சான்று மற்றும் கலந்தாய்வை நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும், ஐடிஐ மற்றும் டிப்ளமோ கல்வி தகுதி கொண்ட (அளவர், நில அளவர், வரைவாளர், அளவர்-cum- உதவி வரைவாளர் மற்றும் வரைவாளர் நிலை-III) 5 பணியிடங்களுக்கு மட்டும் ஐடிஐ/டிப்ளமோ என இரண்டு தனித்தனி பாடத்திட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்காமல் மாறாக ஐடிஐ தரத்தில் பொதுவான பாடத்திட்டமாக ஐடிஐ/டிப்ளமோ என அனைவரையும் அனுமதித்ததை கண்டித்தும், அளவர், நில அளவர், வரைவாளர், அளவர்-cum- உதவி வரைவாளர் மற்றும் வரைவாளர் நிலை-III) 5 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிடாததை கண்டித்தும், துறை சார்ந்த சிறப்பு விதியில் இடம்பெறாத இஞ்சினியரிங் தேர்வர்களை தவறாக பயன்படுத்தி அனுமதிப்பதை கண்டித்தும் இன்று அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.