Skip to main content

சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் போட்டியில் மெகா ஊழல்!!?  

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

வரும் 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்த ஒருநாள் போட்டிக்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இதுவரை விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஆயிரம் பேர் அமரக்கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் மீதமுள்ள 35 ஆயிரம் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்பட்டு வருவதாகவும், விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டுகளும் ஒரு மடங்கு மட்டுமல்லாது இரண்டு, மூன்று மடங்கு என 1500, 2500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இதன் மூலமாக மட்டும் இரண்டரை கோடி ரூபாய் ஊழல் நடைதிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 India-West Indies match in Chepauk

 

அதேபோல் கூல்டிரிங்ஸ் விளம்பரம் மூலமாக பல கோடி ரூபாய்  ஈட்டபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பழனி என்ற ஒருவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில்  நிர்வாகியாக  உள்ள அவர்மட்டுமில்லாமல் கார்த்திக் விசுவநாதன் என்பவரும், பிரசன்னா என்பவரும் இந்த கள்ள டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவதில் முக்கியமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு தலைமை தாங்குவது இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ஆகும். இவருடைய மகள் ரூபா என்பவர் தமிழ்நாடு கிரிக்கெட்  அசோசியேஷனுடைய தலைவராக இருக்கிறார்.

ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக கூறினாலும் அதிகப்படியான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. முழுமையாக இரண்டாயிரம், மூவாயிரம் என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், டிக்கெட் விற்பனையில் மட்டுமே 2 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் நிலையில் விளம்பரம், பார்ட்னர்ஸ் என மொத்தமாக சேர்க்கையில் 50 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

 

 India-West Indies match in Chepauk


ஏற்கனவே தமிழகத்தில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஊழல் நடைபெற்றதாக பிரச்சனைகள் எழ, சௌரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்று போட்டிகளில் ஊழலில் ஈடுபட்டதாக கண்டுபிடித்துள்ளனர். அதில் மட்டும் நடந்திருந்த ஊழல் 250 கோடி ரூபாய் என்றிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் மட்டும் 50 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்