
மகளின் கணவனை தாக்கியதாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
2011-ல் நாகா்கோவில் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ - ஆக இருந்தவா் நாஞ்சில் முருகேசன். இவா் குமரி மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்துள்ளார். இவருடைய ஒரே மகள் ஸ்ரீலிஜாவை கீழசரக்கல்விளையை சோ்ந்த சுப்பிரமணியனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்தநிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார் ஸ்ரீலிஜா. இதனால் நாஞ்சில் முருகேசனுக்கும் மருமகன் சுப்பிரமணியனுக்குமிடையே அடிக்கடி வாய்தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சுப்பிரமணியன், தன்னை உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து விட்டு 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் எடுத்து சென்றதாக நாஞ்சில் முருகேசன் உட்பட 4 போ் மீது வடசேரி போலிசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலிசார் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா். இதற்கிடையில் நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்கதேவிகா தன்னை தனது மகளின் கணவன் சுப்பிரமணியன் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக வடசேரி போலிசில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் அ.தி.மு.கவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.