Published on 09/04/2018 | Edited on 09/04/2018

எஸ்.சி, எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி விவகாரம், வங்கிக் கடன் மோசடி, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, ஏப்ரல் 9-ம் தேதி தேசிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் கு.செல்வ பெருந்தகை தலைமை தாங்கினார்.

கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் இருந்ததால் மாலை வரை களைப்பு தெரியாமல் இருப்பதற்காக இன்னிசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில்தேச பக்தி பாடல்களையும், சிவாஜி பட பாடல்களையும் பாடினார்கள்.