Published on 10/02/2020 | Edited on 10/02/2020
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தேர்விலும் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாருயா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.