
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமை நடைபெற்றது. பானாவரம் உள்வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி குறித்து பல்வேறு மனுக்கள் அளித்தனர்.
சோளிங்கர் நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் டி கோபால் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனு அளித்தார். இந்த மனுவில், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் 2 வந்து தெரு பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றது. மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு 12 மணிமுதல் இரவு 10 மணிவரை அப்பகுதி தெருவையே பாராகமாற்றி குடித்துவிட்டு சண்டை போடுவது, ஆபாச வார்தைகளில் பொதுமக்கள் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபான கடை இருக்கும் இடம் பிரதான சாலை என்பதால் பள்ளி கல்லூரி, மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றோம். அதனால் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் நோயாளிகளின் நலன் கருதி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.
சோளிங்கர் நகர மன்ற தலைவர் கணவர் அசோகனுக்கு சொந்தமான இடத்திலேயே அந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அந்த கடைகளை காலி செய்யச் சொல்லி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பிரமுகரும், நகர மன்ற உறுப்பினர் கோபால் மனு தந்து இருப்பது இரண்டு கட்சிகளிலும் சோளிங்கர் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.