Skip to main content

பிப். 10- ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

assembly election chief election commissioner include officers arrive at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், உமேஷ் சின்ஹா உள்ளிட்ட 8 தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொண்ட குழு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று சென்னை வருகிறது.
 

பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று காலை 08.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, காலை 11.00 மணிக்கு சென்னை வருகிறது. 
 

அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 10- ஆம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு சென்னையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர், மாலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசிக்கிறார்.
 

பின்னர், பிப்ரவரி 11- ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்திக்கும் அக்குழு, பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று மாலையே புதுச்சேரி மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறது.
 

பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையக் குழு, பிப்ரவரி 12- ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து, அக்குழு சென்னை வழியாகக் கேரளா செல்கிறது. 
 

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பாக பிப்ரவரி 10- ஆம் தேதி முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நேரடியாக ஆலோசிப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்