தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் நேரடியாக களம் காண்கின்றனர். இருவரும் அத்தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர்நகர், பழனிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேசிய ஓ.பி.எஸ்., “திமுக 2006ல் இருந்து 2011 வரை ஐந்து வருடம் ஆட்சியிலிருந்தது. அந்தத் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் என அறிவித்தனர். யாருக்காவது கிடைத்ததா; இல்லை. இப்போ பல தேர்தல் அறிக்கைகளை சொல்லியிருக்கிறார்கள். அதுவெல்லாம் பொய்யான அறிக்கை. அது செல்லாத நோட்டு. அதனால் மக்கள் யாரும் அதை நம்பவேண்டாம். 2011 மற்றும் 2016 இரண்டு ஆட்சிகளிலும் நாம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம்; அத்தனை திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.