இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது .இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிமாக இருந்த காரணத்தை கூறி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் சூலூர் தொகுதியை ஜெயித்து கொடுத்தால் 25 நாட்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது அதிமுகவில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் , அப்படி திமுக கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க நேரிட்டால் அவர்களுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சீட் மற்றும் அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது . மேலும் திமுக கட்சிக்கு ஆதரவு தரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தகுதியிழப்பு நடவடிக்கையை தடுக்கவும் ஒரு சில முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரசியில் வட்டாரத்தில் விசாரித்த போது திமுக தலைமையில் தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி அமைப்பது பற்றியும் , ஒரு சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கவும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.