Skip to main content

ஓடும் காரில் இருந்து குதித்து தப்பிய பெண்! - குற்றப் பின்னணியில் தமிழர்களா?

Published on 22/03/2018 | Edited on 22/03/2018

பாலியல் வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார்.

 

molest

 

பெங்களூருவில் உள்ள கசவனஹல்லி பகுதியில் உள்ளது கான்பிடெண்ட் பீனிக்ஸ் குடியிருப்பு. இந்தப் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு மெடிக்கலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்த 28 வயது இளம்பெண்ணை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். சிறிது தூரம் சென்ற அந்தக் கார், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் நிறுத்தப்பட்ட பின் உள்ளேயிருந்த நபர்கள் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், மீண்டும் காரை எடுத்து கிளம்பியுள்ளனர். அப்போது அந்த நபர்களை எட்டி உதைத்த அந்தப் பெண், கார் கதவைத் திறந்து அதிலிருந்து குதித்து தப்பியுள்ளார். சிறு காயங்களுடன் தப்பித்த அந்தப் பெண், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கார் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், சிசிடிவி காட்சிகளில் வண்டி எண் தெளிவாக தெரியாததால், கர்நாடக காவல்துறையினர் தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சொகுசு காரில் போதைப் பொருள் கடத்தல்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
tobacco smuggling from Bengaluru to Chennai by luxury car

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ஒரு சொகுசு கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காரின் பின்புற இருக்கையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட   புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டைகளாக கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்ஜி(26), தசரத்சிங்(27) ஆகிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 2.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை சேர்த்து பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

கோவையில் என்.ஐ.ஏ. சோதனை! 

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
NIA seatch in Coimbatore

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு  முதலில் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்திருந்தனர். 

NIA seatch in Coimbatore

இந்நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (21.05.2024) இரு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்தs சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்தச் சோதனையின் போது இருசெல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.