
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு ஒரு பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியதால் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியே உத்தரவு, வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் பங்கீடு ரத்து உள்ளிட்ட முடிவுகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்தது. அதற்கு எதிர்வினையாக, வான்வெளியை இந்தியா பயன்படுத்த தடை, சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதற்கிடையில், காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மூன்றாவது நாடுகள் வழியாகவோ இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய தடை விதித்துள்ளது. அதே போல், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வரவும் மத்திய தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ள