Skip to main content

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - மூன்று மாணவர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

india - pak

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிறன்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.

 

இந்தப் போட்டி முடிந்து சில தினங்கள் ஆகிவிட்ட பிறகும், இந்தப் போட்டி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாகவும், இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பாய்ந்துள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக மூன்று ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த மூன்று மாணவர்கள் மீது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல், தேசத்துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே நீதிமன்றத்திற்கு வரும்போது, அடையாளம் தெரியாத சில வழக்கறிஞர்கள் மற்றும் உதவியாளர்களால் மூன்று மாணவர்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களைத் தாக்கியவர்கள் பாரத் மதாகி ஜே என கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.

Next Story

மீண்டும் அரங்கேறிய கொடூரம்; மாணவனைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

gang beaten a class 12 student and urinated on his face

 

12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி அவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மருத்துவ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளது. மேலும் அந்த கும்பல் அந்த மாணவனின் முகத்தில் சிறுநீரையும் கழிக்கிறது. அந்த மாணவர் தன்னை விட்டுவிடுங்கள் என்று மன்றாடியும் அவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். இதனை நால்வரில் இரண்டு பேர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். 

 

இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து மீரட் போலீசார் கூறுகையில், மாணவனை மர்ம கும்பல் தாக்கும் சம்பவம், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி  நடந்தது என்றும், அதில் சம்பந்தப்பட்ட அவி சர்மா, ஆஷிஷ் மாலிக், ராஜன் மற்றும் மோஹித் தாக்கூர் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் ஆஷிஷ் மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் தாக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.