Skip to main content

சூனியக்காரி என்று ஒதுக்கப்பட்ட பாட்டியை அங்கீகரித்த கின்னஸ் புத்தகம்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

ஒடிசாவில் 31 விரல்களை கொண்ட வயதான பெண்ணை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் 63 வயதானவர் குமாரி நாயக். இவருக்கு கையில் 12 விரல்களும், காலில் 19 விரல்களும் இருக்கிறது. இதனால் இவரை சூனியக்காரி என்று கூறி ஊரில் உள்ளவர்கள் இவரை ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் அவரும் ஊரில் யாருடனும் பேசாமல் ஊருக்கு வெளியே தனியாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்.
 

jk



இந்நிலையில் இந்த மூதாட்டியை தற்போது கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே 14 கைவிரல்கள் மற்றும் 14 கால் விரல்கள் உடைய தேவேந்திரன் என்பவரின் சாதனையை தற்போது குமாரி பாட்டி முறியடித்துள்ளார். தற்போது அவரை சந்தித்துள்ள அரசு அதிகாரிகள் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஓய்வு ஊதியம் வழக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்