சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 10000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திரும்பி உள்ளார். அங்கிருந்து வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்காக விமான நிலையத்தில் போதுமான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை செய்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த 16 பேர் நேற்று சீனாவில் இருந்து இந்தியா திரும்பினர். இவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் 30 நாட்களுக்கு அவர்களை பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)