Skip to main content

88 வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்; தேதி அறிவிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 88th Cauvery Water Management Committee Meeting; Notification of date

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக் காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடகா மேல்முறையீடு செய்தது. இந்நிலையில்  காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 88 வது கூட்டம்  டெல்லியில் வரும் அக்.12 ஆம் தேதி அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்