Skip to main content

 வெள்ளத்தில் மிதந்தபடியே கேரளாவில் கள் விற்பனை! படகில் சென்று போதையேற்றும் குடிமகன்!

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
k

 

கேரள மாநிலமே மழை வெள்ளத்தால் மிதக்கும் நிலையில் துடுப்புப் படகில் சென்று கள்ளுக்கடையில் போதையேற்றுக்கொள்ளும் குடிமகனின்  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை இழந்து தத்தளிக்கின்றனர்.  பல மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவினால் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  2.23 லட்சம் பேர் 1568 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  நேற்று முதல்  23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.   மழை வெள்ளத்திற்கு இதுவரை 173 பேர் பலியாகியுள்ளனர்.   

 

இந்த நிலையிலும், மழை வெள்ளத்திலும் கேரளாவில் கள் விற்பனையும் நடக்கிறது. மழை வெள்ளம் கடைக்குள் புகுந்த நிலையிலும் கள் விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது.  படகிலும், துடுப்பிலும் சென்று குடிமகன்கள் போதையேற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

  

சார்ந்த செய்திகள்