Skip to main content

கேரளாவில் அதிகரித்த கரோனா உயிரிழப்புகள்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021
hj


இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் குறைந்து வந்தாலும் கேரளாவில் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு  2 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வரும் சூழலில், கேரளாவில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அந்த மாநில அரசு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் முழு ஊரடங்கை அறிவித்ததுள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் தினசரி பாதிப்பு 21,613 பேர் என்ற அளவில் பதிவாகி உள்ளது. மேலும் 18,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 127 பேர் மரணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை பெரிய அளவில் இருப்பது அம்மாநில மக்களை வருத்தமடைய செய்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1.75 லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்