Skip to main content

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு தருவார்கள் என்று பெண்கள் நினைக்கிறார்கள்” - பிரதமர் மோடி

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 PM Modi says Women think they will be protected if BJP comes to power

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.  அதன்படி, சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து, நேற்று (02-10-23) இரண்டாவது முறையாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி, சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அவர், “ ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் வெற்றிகரமாக ஆட்சி அமைத்துவிட்டது. ஆனால், அந்த ஆட்சியை முறையாக நடத்த அவர்கள் தவறவிட்டார்கள். ராஜஸ்தானில் ஒருவேளை பா.ஜ.க அமைந்துவிட்டால், தன்னால் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என அசோக் கெலாட் பேசியிருப்பது மூலம் காங்கிரஸின் தோல்வியை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால், காங்கிரஸை வீட்டிற்கு அனுப்பும் கவுண்டவுன் ஆரம்பமாகி விட்டது. மீண்டும் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

 

இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தான் மாநிலத்தைச் சீரழித்து விட்டது. குற்றங்களில் எண்ணிக்கை பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடமாக இருப்பது எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது. இதற்காகவா நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்?. நாட்டின் உள்ள பெண்களுக்கு எதிராக எங்கு  கொடுமை நடந்தாலும் நான் வேதனைப்படுகிறேன். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் இதை பாரம்பரியமாகவே மாற்றி வைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஒவ்வொரு பெண்களும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்று நினைக்கிறார்கள்.  அதனால், பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொரு பெண்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் கொண்டு வரும்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜ்புத் இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை; வலுக்கும் போராட்டம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Rajput Movement leader lost his life and protest to get stronger

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சுங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்