Skip to main content

சூட்கேஸில் சிறுமியின் உடல்-அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

Published on 21/05/2025 | Edited on 21/05/2025
Girl's found in suitcase - public shock

சூட்கேஸில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அடுத்த பழைய சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே பெரிய சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கிடமாக கிடந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக சூர்யா நாகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார் சூட்கேஸ் பெட்டியை திறந்து பார்த்த பொழுது அதில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் ரத்த காயத்துடன் இருந்தது.

வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு சிறுமி  சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டு இங்கு வீசப்பட்டாரா அல்லது ரயில்வே பாலத்தின் அருகிலேயே சூட்கேஸ் கிடந்ததால், ரயிலில் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆதாரங்களை சேகரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

சூட்கேஸில் இருந்து 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்