Skip to main content

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வேண்டும்! - பாபா ராம்தேவ்

Published on 13/05/2018 | Edited on 14/05/2018

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியா கைப்பற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

Ramdev

 

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் நேற்று அளித்த பேட்டியில் மும்பை தீவிரவாதத் தாக்குதல் குறித்து பேசியிருந்தார். அதில், ‘தீவிரவாதக் குழுக்கள் இன்னமும் இங்கு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 2008ஆம் ஆண்டு மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உருவாகிய தீவிரவாத அமைப்புகளே காரணம். இதுகுறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது’ என பேசியிருந்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவ், ‘பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்றால், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் ஊடுருவி அதை இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே ஒரே தீர்வு. பலோசிஸ்தான் விடுதலைக்கும் இந்தியா உதவவேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் தனது தவறுகளை உணரும்’ என பேசியுள்ளார்.

 

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்