Skip to main content

"பணம் சம்பாதிக்க கமலுக்கு வேற வழியே இல்லையா" தெறிக்கவிடும் தேனி கர்ணன்!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையி்ல், இதுகுறித்து தேனி கர்ணனிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அனைத்து கேள்விகளுக்கும் அவர் அதிரடி பதில் கொடுத்தார். அவை வருமாறு,


பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. அதை மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதை பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் வெளிநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நிர்வாணமாக இருக்கலாம், அரைகுறை ஆடை அணிந்து கொண்டு சுற்றலாம், யாரும் எதையும் கேட்க மாட்டார்கள். அதை நானே தொலைக்காட்சிகளில் நேரில் பார்த்துள்ளேன். ஆணும், பெண்ணும் குடித்தனமே நடத்துவார்கள். பார்க்கவே அருவருப்பா இருக்கும். அதை அடிப்படையாக வைத்துதான் மும்பையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதற்கு பிறகுதான் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொருத்தமட்டில் இந்த நிகழ்ச்சி சீரழிவைத்தான் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு எப்போதும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் இடம். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அதற்கு உலை வைத்துவிடும். பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் அதே டிவியில் தான் கோபிநாத் நடத்தும் நீயா நானா என்ற அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதை குடும்பத்தோட பார்க்க முடியும். இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியுமா? இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு எதை சொல்ல வருகிறார்கள். 

 

Theni Karnan interview Bigg Boss 3



 

 

 

அந்த தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்தித்தான் வருமானம் பார்க்க வேண்டுமா? இந்த நிகழ்ச்சி மூலமா டிஆர்பி அதிகமா வருகிறது என்றால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற பெண்கள் எல்லாம் அரைகுறை ஆடையில் தானே இருக்கிறார்கள். அப்புறம் டிஆர்பி வராதா என்ன. ஒரு 10 பேரை பங்களாவில் அடைச்சி வைச்சிகிட்டு அவுங்க தூங்குறது, பேசுறது, சாப்பிடறது இதை எல்லாம் எதுக்கு எங்களிடம் காட்டுறீங்க. இதுல ஒருத்தர் மூன்று பேரை லவ் பன்றாரு. அந்த தொலைக்காட்சியை வன்மையா கண்டிக்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழச்சியை கமல் நடத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் அவர் கண்டிப்பா கெட்ட பெயர் வாங்குவார். அவர் கட்சிக்கு இதன் மூலம் எந்த லாபமும் கிடைக்க போவதில்லை. கமல் என்ன சொல்லவராரு, ஒன்னும் சொல்ல போறதில்லை. வடிவேல் ஒரு படத்தில் ரோட்டில் போகும்போது இரண்டு பசங்க பேசிகிட்டு இருப்பாங்க. கள்ளத்தனமா என்னடா பேசுறீங்கன்னு அவங்களை ரூம்ல போட்டு பூட்டிட்டு அவர்கள் அப்பாவுக்கு தகவல் கொடுப்பார். அதை போலத்தான் இருக்கு கமல் செய்கிறது. இதை கண்டிப்பா தடை செய்யனும். கமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. மக்களை மடை மாற்றி லாபம் பார்க்காதீர்கள்.
 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியா நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
 

பொழுதுபோக்கு ஷோ நிறைய இருக்கு. காமெடி ஷோ இருக்கு, ரியாலிட்டி ஷோ இருக்கு, இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கு. கொச்சைத்தனமா காட்டுறதுதான் பொழுதுபோக்கா? 

பிடிக்காதர்கள்  அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்கலாமே? 
​​​​​​

அப்ப "நீல" படத்தை டிவியில் போடலாமா? பிடிச்சா பாருங்க, பிடிக்காதவங்க பாக்காதீங்கன்னு சொல்ல முடியுமா. இந்த நிகழ்ச்சியால் ஏதாவது நன்மை இருக்கா? நடிகர்கள், துணை நடிகர்கள் சாப்பிடுவதை பார்த்து நாம என்ன செய்ய போறோம். அவங்கெல்லாம் தமிழக மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.


உங்களை போன்று விமர்சனம் வைப்பவர்கள் கூட அந்த நிகழ்ச்சியை பார்க்கத்தானே செய்கிறார்களே?

இந்த நிகழ்ச்சியில் என்னதான் நடக்குதுனு தெரிந்துகொள்ளத் தான் அதை இரண்டு நாட்கள் பார்த்தேன். எனக்கே அருவருப்பா போயிடுச்சி. இது எல்லாம் ஒரு நிகழ்ச்சி, அதற்கு ஒரு தொகுப்பாளர். மானம் உள்ளவன் பார்ப்பானா இந்த நிகழ்ச்சியை!