Skip to main content

முதல் முறையாக ஸ்டாலின் சென்றார்...இபிஎஸ், ஓபிஎஸ் ஆப்சென்ட்...ஓட்டு யாருக்கு...உளவுத்துறை ரிப்போர்ட்!   

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியிலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியதால் பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுல மக்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல்சேகரன் நினைவுதினமும், அக்.30-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையும் விமரிசையாக கொண்டாடப்படும் போது, சமூக மோதலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மாநில அரசுகள் செயல்படும்.

 

dmk



எனவே 2013-ஆம் ஆண்டிலிருந்து ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இன்று வரை அதை நீட்டித்து வந்தது இராமநாதபுர மாவட்ட நிர்வாகம். "வாடகை வாகனங்களில் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் வந்தாலும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்குமேல் வரக்கூடாது. 1 கி.மீ-க்குள்தான் தொடர் ஓட்டமாக ஜோதியை எடுத்து வரவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.'' இதற்காக மாவட்டத்தில் 5000 காவலர்களை நிறுத்தி, சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா மினி உளவு விமானத்தின் கண்காணிப்புடன் பரமக்குடியை வட்டமடித்தது காவல்துறை.

 

dmk



இமானுவேல்சேகரனுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்தும் செல்லூர் கிராம மக்கள், காலை 7.50-க்கே அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேற, அதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழகமும் அஞ்சலி செலுத்த, அ.தி.மு.க. சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.


ஆளுங்கட்சியாக இருந்தால் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், எதிர்க்கட்சியாக இருந்தால் சுப.தங்க வேலன். இவர்கள் இருவரில் ஒருவர் தி.மு.க. சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.. ஆனால், இந்த ஆண்டு நிலைமை சற்று மாறியிருக்கிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் புடைசூழ தி.மு.க. தலைவர் ஸ்டாலினே இமானுவேல் நினைவிடத் திற்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிப் பிரமுகர்களும் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

"அண்மையில் கட்சி ஆரம்பித்த தினகரன்கூட கடந்த ஆண்டும் இவ்வாண்டும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், தங்களது சமுதாயத் தலைவர் நினைவிடத்திற்கு வருவதில்லையே என்ற பெரும் குறை தேவேந்திரகுல மக்களிடம் இருந்தது. இந்த ஆண்டு அந்த குறையை நிவர்த்தி செய்திருக்கிறார்'' என தங்களுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர் நினைவிடத்தினில் இருந்த கீழகன்னிச்சேரி, வீரம்பல், வாத்தியனேந்தல் உள்ளிட்ட கிராம மக்கள்.

தேவேந்திரகுல சமூகத்தை சேர்ந்த சிலரோ, "நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியே இதற்குக் காரணம். குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு தேவேந்திரகுல சமூகத்து மக்களின் ஓட்டுக்களே காரணம் என தி.மு.க. கருதுகிறது. அதேநேரத்தில் பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், சாத்தூர், நிலக்கோட்டை சட்ட மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சொற்ப ஓட்டுக்களில் தோற்றதற்கும் இந்த மக்களே காரணம் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த 5 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் தேவேந்திர குல மக்களே. ஒருவேளை இந்த 5 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தால், தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும்'' என்று குறிப்பிட்டனர்.

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட நாகலாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல இளைஞர் கார்த்திக் நம்மிடம் "தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவேந்திரகுல மக்கள் அதிகம் வசிக்கும் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் தமிழிசையை விட கூடுதலாக தலா 60 ஆயிரம் வாக்குகள் கனிமொழி பெற்றார். அதேபோல், ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கும் இந்த சமூகத்தினரின் வாக்குகள் காரணமாக இருப்பதை தி.மு.க. உணர்ந்திருக்கிறது'' என்றார்.

அவரே தொடர்ந்து... அருந்ததி இன மக்களின் தலைவராக விளங்கும் ஒண்டிவீரன் நினைவு தினம் கடந்தமாதம் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது. சபாநாயகர் தனபாலுக்குப் பதிலாக இந்த முறை ஓ.பி.எஸ். வந்தார். அதனால் முதல்முறையாக மு.க. ஸ்டாலினும் நெல்லை வந்து ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். அப்போதே தேவேந்திர குல மக்களிடம் முணுமுணுப்பு எழுந்தது. அதைச் சரிசெய்யும் வகையிலே இன்றைய தினம் பரமக்குடிக்கு வந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது'' என்கிறார் அவர். பரமக்குடி செல்வதற்காக ஸ்டாலின் மதுரை வந்திருந்தபோது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.