Skip to main content

இரண்டு சைடும் பா.ம.க! -கூட்டணி நிலவரம்!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா.ம.க. தலைமை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதையும் கடந்த மாதமே அம்பலப்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில், இரு கழகங்களிடமும் பா.ம.க. பேச்சு நடத்தி வருவது தற்போது தேர்தல் அரசியலில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

pmkஇது குறித்து பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க விருக்கிறது. இதில் பாப்பிரெட்டி பட்டி, அரூர், ஆம்பூர், குடி யாத்தம், சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர் ஆகிய 8 தொகுதிகள் வட தமிழகத்தில் வருகிறது. இதில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றிபெற்று சட்ட மன்றத்தில் நுழைய விரும்புகிறது பா.ம.க. தலைமை. கூட்டணிக்கு பா.ம.க.வின் முதல் சாய் ஸாக இருந்தது தி.மு.க. தான். ஆனால், இதில் முந்திக்கொண்டது அ.தி. மு.க.தான். எம்.பி.க்களை விட எம்.எல்.ஏக்கள் முக்கியம் என கணக்குப் போட்ட எடப்பாடி, கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வட தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ள பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பி தூது விட்டார். எல்லா விவரங்களும் பேசப்பட்ட நிலையில், பா.ம.கவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது தி.மு.க.'' என்கின்றனர் பா.ம.க. தலைமைக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

பா.ம.க.வை தி.மு.க. பக்கம் கொண்டு வருவதில் துரைமுருகன் முதல் ஸ்டெப் வைக்க, ஐ.பெரியசாமி போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் கடுமையாக எதிர்த்ததால் பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தரவில்லை ஸ்டாலின். ஆனால், இதில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைமையின் பார்வை வேறு என்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்த போது, ""தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கக் கூடாது என திட்டமிடும் ராகுல் காந்தி, அ.தி.மு.க. + பா.ஜ.க. உருவாக்கும் கூட்டணி யின் வெற்றியை தடுக்க வேண்டுமானால் பா.ம.க.வை மட்டும் வெளியே கொண்டுவந்து தி.மு.க. கூட்டணிக்குள் இணைத்துவிட்டால் வட தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன யோசனையை தீவிரமாகப் பரிசீலித்திருக்கிறார்.

தன்னோடு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பினார் ராகுல். தி.மு.க. நிர் வாகிகள் சிலரும் கூட்டணிக் கணக்கு களைப் போட்டுக் காட்ட, இதனைத் தொடர்ந்தே, பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தந்திருக் கிறார் ஸ்டாலின். 4 எம்.பி.தொகுதி, 3 இடைத் தேர்தல் தொகுதி என பேச்சுவார்த்தை நகர்ந்து வருகிறது. அநேகமாக தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்துவிடும்''’ என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க. மா.செ.க்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப் பட்ட நிலையில், காங்கிரஸ் மூலம் தி.மு.க. தற் போது அழைப்பதால் ராமதாசுக்கும் அன்புமணிக்கு மிடையே வாதப் பிரதிவாதங்களும் நடந்திருக்கின் றன. அ.தி.மு.க.வை விட தி.மு.க.தான் சரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் அன்புமணியும், தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. மதிப்ப தில்லை என்கிற சந்தேகத்தை ராமதாசும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 6 எம்.பி.தொகுதி, 3 இடைத்தேர்தல் தொகுதி என உறுதி செய்திருந்த எடப்பாடி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. தாவ முயற்சிப்பதை அறிந்து டென்சனாகி யிருக்கிறார்.

cvsanmugamஇதுகுறித்து அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் விசாரித்தபோது, ""வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட அங்கீகாரமும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்ததால் வன்னியர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மதிப்பு உயர்ந்தது. இதனை பா.ம.க. ரசிக்கவில்லை. திண்டி வனத்தில் ராமதாஸ் கட்டி யுள்ள கல்லூரிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் வாரியத்தின் பிடியில் வரும். இந்தச் சூழலில் தான் கூட்டணி அழைப்பை கொடுத்தார் எடப்பாடி.

அதைக்கெட்டியாக பிடித் துக்கொண்ட பா.ம.க., வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 4 கண்டிஷன்களைப் போட்டது. அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஆரோக்கியமாக நகர்ந்தது. ஆனால், தற் போது அ.தி.மு.க. கூட்டணியை பா.ம.க. உதற நினைப்பதையறிந்து டென்சனான எடப்பாடி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானத்தை வாரியத்தின் தலைவராக நியமித்துவிட்டார். தி.மு.க.வை தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. வரும் பட்சத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் முடக்கப் படும்'' என்கிறார்கள் மிக அழுத்தமாக.

இதற்கிடையே, பா.ம.க.வை சேர்க்கக் கூடாது என அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் போர்க் கொடி தூக்குவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

-இரா.இளையசெல்வன்