Published on 10/09/2022 | Edited on 10/09/2022

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எழுபது ஆண்டுகள் அரசாண்ட முதல் அரசி. 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண். அரசி எனில் தானே என உலகை உணரவைத்த முதல் ராணி. உங்களோடு கை குலுக்கியது என் உள்ளங்கைப் பெருமை. உங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.
எழுபது ஆண்டுகள்
அரசாண்ட முதல் அரசி
17 பிரதமர்கள் கண்ட
முதல் மகாராணி
ராஜ குடும்பத்தின்
முதல் பொறி நெறியாளர்
ராணுவப் பணி செய்த
முதல் அரண்மனைப் பெண்
அரசி எனில் தானே என
உலகை உணரவைத்த
முதல் ராணி
உங்களோடு கை குலுக்கியது
என் உள்ளங்கைப் பெருமை
உங்கள் புகழைக்
காலம் சுமந்து செல்லும் pic.twitter.com/thHHB30MmW— வைரமுத்து (@Vairamuthu) September 10, 2022