![oh my kadavule](http://image.nakkheeran.in/cdn/farfuture/6RTRF0xkcm4IEzgx_kmXMTrj1lYhXmykqymbcZlinGs/1595220039/sites/default/files/inline-images/oh-my-kadavule_0.jpg)
புதுமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. இப்படத்தில் ஒரு நீண்ட் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்தாண்டு ஃபிப் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான இப்படம், இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் அப்போதே பாராட்டினார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தற்போது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் 'ஓ மை கடவுளே' பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். அற்புதமான நடிப்பு, புத்திசாலித்தனமாக எழுதி இயக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் நீங்கள் ஒரு இயல்பான நடிகர் என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.