Published on 11/08/2018 | Edited on 11/08/2018
![surya karthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/xz95rpeU7liap3LgxKO-BzVA9NQIJ_lPoVqg2CWdh-o/1534009718/sites/default/files/inline-images/sk1_0.jpg)
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கேரளா அரசு தற்போது மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகியுள்ளனர். மேலும் 'கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.