Skip to main content

"ஒரு இனிய தொடக்கம்..." - அக்ஷய் குமார் படக்குழுவை நேரில் வாழ்த்திய சூர்யா

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

surya goes mumbai soorarai pottru hindi remake

 

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்  ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானது  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.  தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தில் தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

 

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கின் பணிகளை பார்வையிடுவதற்காக நடிகர் சூர்யா மற்றும் அவரது 2டி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர் இருவரும் மும்பை சென்றுள்ளனர். அங்கு நடிகர் அக்ஷய் குமார், சுதா கொங்கரா மற்றும் படக்குழுவினர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப்பின் 'படே மியன் சோட்டே மியன்' 

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Akshay, Tiger, Prithviraj starring Bade Miyan Chote Miyan upd

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'படே மியன் சோட்டே மியன்'. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்கா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.

இப்படம் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டைக் காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்." என்றார்.

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.