Skip to main content

“இந்திய திரைத்துறையே வாயை பிளந்து பார்க்கப் போறாங்க” - சூர்யா

Published on 07/11/2024 | Edited on 07/11/2024
suriya speech in kanguva 3d trailer release function

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் 3டி ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியாவில் எந்த சினிமா துறையை சேர்ந்தவராக இருந்தாலும் கங்குவாவை வாயை பிளந்து பர்க்கப் போறாங்க. இதை தாழ்மையா, பணிவா, ரொம்ப அடக்கமா சொல்றேன். ஒளிப்பதிவாளர் வெற்றியுடைய காட்சிகளைப் பார்த்து எப்படி இது சாத்தியமாச்சு என கேட்க போறாங்க. ஏற்கனவே 45 நிமிட படத்தை பார்த்து பாலிவுட்டில் கரண் ஜோகர் அப்படி கேட்டுவிட்டார். இந்தப் படம் கண்டிப்பாக இதுவரை பார்க்காத ஒரு அனுபவத்தை தரும். சுப்ரீம் மாஸ்டரை ஒரு சொந்தக் காரரை போல்தான் பார்க்கிறேன். அவர் சொன்னால் 10வது மாடியில் இருந்து கூட குதிப்பேன். எனக்கு என்ன ஆனாலும் அவர் பார்த்துப்பார்” என்றார். பின்பு படக்குழுவை பற்றி நிறைய விஷயங்களை பேசிய அவர், இறுதியாக, “நவம்பர் 14ஆம் தேதி சந்திப்போம். நமக்கு இரட்டை தீபாவளியாக அமையும். நெருப்பு மாதிரி படம் இருக்கும்” என்றார். 

சார்ந்த செய்திகள்