சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு 'கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் 'இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்' என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்...
"கடந்த ஒரு வருடத்திற்கு முன் என்னுடைய ரசிகர் ஒருவர் கட்அவுட் இறந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக நான் என் படத்திற்கு கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள் என எனக்கெதிராக விமர்சனங்கள் வந்தது. அதனால் நான் கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என கிண்டலாக சொன்னேன். நான் இப்படி சொன்னது யார் மனதையாவது புண் படும்படியாக இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம். நான் மாற்றி பேசவில்லை அனைவரும் மாற வேண்டும் என்று தான் பேசுகிறேன்" என்றார்.