Skip to main content

"மணிரத்னம் பீஷ்மர்தான், ஆனால்..." - வைரமுத்துக்கு ஆதரவாக சீனுராமசாமி கருத்து 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

seenuramasamy tweet about vairamuthu and maniratnam

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

பொதுவாக ஏ.ஆர் ரஹ்மான் - மணிரத்னம் கூட்டணி என்றால் வைரமுத்து பாடல்கள் இடம் பெறாமல் இருக்காது.  தமிழனின் பெருமைகளை தனது பாடல் வரிகளின் மூலம், உணர்ச்சிகள் குறையாமல் கொடுக்கும் வைரமுத்து ஏன் தமிழர்களின் பெருமைகளை பேசும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பாடல்கள் எழுதாதது ஏன் என ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். 

 

இதற்கு பதிலளித்த மணிரத்னம், "தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள், கலைஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். வைரமுத்து சிறந்த கவிஞர். நான், ஏ.ஆர் ரஹ்மான், வைரமுத்து ஆகிய மூன்று பேரும் இணைந்து நிறைய படம் பண்ணிருக்கிறோம். வைரமுத்துவின் கவிதைகளை பாடலாக மாற்றியிருக்கிறோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதையும் தாண்டி நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி என்பது மிகவும் வளமையான மொழி. அதில் சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அதனால் தான் புது புது எழுத்தாளர்கள் வருகிறார்கள். அதேபோல்தான் இதுவும். பொன்னியின் செல்வன் படத்திற்கு வைரமுத்துவை பயன்படுத்தாமல் புது ஆட்களைப் பயன்படுத்தினோம்" என்றார்.

 

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "புதியவர்கள் வருவர் போவர் ஆனால் நீங்க பீஷ்மர் மணிரத்னம் சார் நீங்கள் நட்டது விதை விருச்சமாகும், புதிய கவிஞருக்கு வாழ்த்துகள். ஆனால் "வைரமுத்துவை விட என நீங்கள் திறமை சிறுமை செய்தது  கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள். உங்கள் 'இருவர்' காலம் கண் மை அல்ல தடம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.