![ranbir kapoor](http://image.nakkheeran.in/cdn/farfuture/69avgabDzWeS4sos4NU5EtRtFtAGY_gBtmT0WxQyfxQ/1661343850/sites/default/files/inline-images/167_6.jpg)
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'பிரம்மாஸ்திரம்'. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரமாஸ்திரம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பிரமாஸ்திரத்தின் தோற்றத்தை உங்களிடம் காட்டியதில் மகிழ்ச்சி. கலை, கலாச்சாரம், இசையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் உங்களுடன் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். 2013ஆம் ஆண்டிலேயே பிரமாஸ்திரம் படம் பற்றி நானும் இயக்குநரும் பேசினோம். வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மணாலியில் இருந்த என்னிடம் அயன் முகர்ஜி இந்தக் கதையை கூறினார். இந்தப் படத்திற்காக கடந்த 10 வருடங்களாக இயக்குநர் அயன் முகர்ஜி கடுமையாக உழைத்திருக்கிறார். அமிதாப் பச்சன், நாகர்ஜுனா மாதிரியான லெஜண்ட்ஸுடன் இணைந்து நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.
ஆலியா பட்டை இந்தப் படத்தில்தான் சந்தித்தேன். இந்தப் படத்தின்போதுதான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இந்தப் படம் முடியும்போது எங்களுக்கு திருமணமே முடிந்து விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இதிலிருந்தே இந்தப் படத்திற்காக எத்தனை வருடங்கள் நாங்கள் உழைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். படம் விரைவில் ரிலீஸாக இருப்பதால் படத்தோடு சம்மந்தப்பட்ட அனைவருக்குமே இது எமோஷனாலான தருணம். படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.