![ranbir kapoor](http://image.nakkheeran.in/cdn/farfuture/uwUqPsy2B203m7qz3KNlKElhRyfgNY9bi8rWPw4jvAw/1660201008/sites/default/files/inline-images/147_13.jpg)
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'பிரம்மாஸ்திரம்'. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.ரிலீஸ் தேதி நெருங்கியதால் பாடல்களை ரிலீஸ் செய்து ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ’தேவா தேவா...’ என்ற பாடல் யூட்யூப் தளத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், இப்பாடலில் நடித்த அனுபவத்தை நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் பாடலை முழுமையாக ரசித்தேன், தனிப்பட்ட முறையில் பல நிலைகளில் அதை தொடர்புப்படுத்த முடியும். இந்த பாடல் ஒருவரை ஆன்மிக ரீதியில் மிகவும் சக்திவாய்ந்ததாக உணர வைக்கிறது. மேலும் எல்லோரும் அதை உணர்ந்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
'தேவா தேவா' பாடலானது சிவத்தின் உள்ளே இருக்கும் சக்தியைக் கண்டுபிடிக்கும் மந்திர தருணத்தை உள்ளடக்கிய ஆன்மிகம் பற்றிய பாடலாகும். இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.